விரிதாள் ( Microsoft Excel)
மக்களது அன்றாட தேவைகளுக்கு மட்டுமன்றி தொழில் ரீதியான தேவைகளுக்கும் பல்வேறு கணக்குகளை செய்வது அவசியமாகும். இந்த கணக்குகளை செய்வதற்கு மக்கள் பல்வேறு உபாயங்களை பயன்படுத்துகின்றனர்.பிரச்சனைகளின் தன்மைகளை பொறுத்து பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. கணிப்பதற்கு என மனதையும் விரல்களையும் உபயோகிக்கின்றனர். சிக்கலான விஷயங்களை தீர்ப்பதற்கு எழுதித் தீர்த்தல் அல்லது கணிப் பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இந்தக் கணித்தல் பணிகளை செம்மையாகவும் இலகுவாகவும் செய்வதற்கென Spread Sheet (EXCEL) எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி அறிந்து கொள்வோம்.
● இலகுவானதும் கடினமானதுமான
கணக்குகளை செய்தல்.
● வரைபடங்கள் (Charts) மூலம் தரவுகளை(செய்திகளை) விளக்குதல்.
● தரவுகளை(Datas) ஏறுவரிசை
மற்றும் இறங்கு வரிசையில் ஒழுங்குப்படுத்தி காட்டுதல்.
● தேவையான தரவுகளை
மாத்திரம் வேறுபடுத்தல்.
● தரவுகளின் நம்பகத்தன்மையினை பரிசீலித்தல்(Analysis)
.
● கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி தரவுகளை பாதுகாத்தல்.
● எதிர்கால உபயோகத்திற்கு சேமித்து வைத்தல்.
விரிதாள் பிரயோக மென்பொருள்கள்
மென்பொருட்கள் (Software) |
உற்பத்தி நிறுவனங்கள் |
Excel |
Microsoft
corporation |
Numbers |
Apple Inc |
Libre Office
calc |
The document
foundation |
Open Office
calc |
Apache
foundation |
Microsoft office மென்பொருள் அனுமதிப்பத்திரத்துடன்(License)
பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.Libre office உற்பத்திகளை(Free License) இலவசமாக பயன்படுத்த
முடியும்.
Microsoft Excel , இடைமுகமும் அதன் கூறுகளும் (GUI - Graphic User Interface)
உள்ளடக்கம் | விபரம் |
1. துரிதப் பிரவேச கருவி பட்டை Quick access tool bar | Save, print, preview, undo, new போன்ற அடிக்கடி பயன்படுத்தப்படும் கருவிகளை பெற்றுக் கொள்ள உதவும் |
2. தலைப்பு பட்டை Title bar | பிரயோக மென்பொருள் பெயரை காட்சிப்படுத்தும் |
3. நாடா Ribbon | Home, insert, page, layout போன்ற தத்தல்களையும் கருவிகளையும் கொண்டிருக்கும் |
4. உதவி Help | உதவிகளைப் பெற்றுக் கொள்ள பயன்படும் |
5. கட்டுப்பாட்டு பொத்தான்கள் Control button | பணித்தாள் சாளரத்தை விரிவுபடுத்தல் சுருக்குதல் மற்றும் மூடுதல் |
6. செருகுதல் Insert | சூத்திரங்களை உருவாக்குவதற்கு அவசியமான சொல்லாடல் பெட்டியை பெற்றுக் கொடுத்தல் |
7. தத்தல் Tab | நாடாவை மாற்ற உதவும் |
8. சூத்திர பட்டை Formula Bar | சூத்திரங்களை வெளிப்படுத்துவதற்கும் கலங்களின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த உதவும் |
9. நிரல்களின் தலைப்பு column heading | நிரல்களின் தலைப்புகளை வெளிப்படுத்தும் |
10. நீள் சுருட்பட்டை Vertical scroll bar | பணித்தாளை கிடையாக நகர்த்த உதவும் |
11. இயக்குகலம் Active cell | தரவு உட்படுத்தப்பட்ட கலத்தை காட்டும் |
12. வரிசை தலைப்பு Row heading | வரிசை இலக்கத்தை காட்டும் |
13. பணித்தாள் நிறுத்தல் நிலை Sheet tab | பணித்தாளை பிரதிநிதித்துவப்படுத்தும் |
14. கிடைச்சுருட் பட்டை Horizontal scroll bar | பணித்தாளை செங்குத்தாக மேலும் கீழும் நகர்த்த உதவும் |
15. நிலைமை பட்டை Status bar | பணித்தாளுடன் இணைந்த நிலைமைகளை காட்சிப்படுத்தும் |
16. காட்சிப்படுத்தல் பொத்தான் View Buttons | பணித்தாளை காட்சிப்படுத்தக்கூடிய வேறுபட்ட முறைகளை வெளிப்படுத்தும் |
17. உரு கட்டுப்பாட்டு கருவி Zoom control | பணித்தாள்களை விரிவாக்குவதற்கு அல்லது சுருக்கி பார்க்க உதவும் |
LibreOffice Calc இடைமுகமும் அதன் கூறுகளும்
உள்ளடக்கம் | விவரம் |
1. தலைப்பு பட்டை (Title Bar) | மென்பொருளின் பெயரை காட்சிப்படுத்தும் |
2. பட்டியல் பட்டை (Menu Bar) | பிரதான கட்டளைகளை தெரிவு செய்ய உதவும் |
3. நியம கருவி பட்டை (Standard Tool Bar) | நியமக் கருவிகளை தெரிவுசெய்ய பயன்படக்கூடியது |
4. கட்டுப்பாட்டு பொத்தான் (Control Button) | பணித்தாள் சாளரத்தை விரிவுபடுத்தல் சுருக்குதல் மற்றும் மூடுதல் |
5. பெயர் பெட்டி (Name Box) | செயற்பாட்டு களத்தின் முகவரியை வெளிப்படுத்தும் |
6. செருகுதல் (Insert) | சூத்திரங்களை உருவாக்குவதற்கு அவசியமான குறியீட்டு முகப்பினை காட்சிப்படுத்தும் |
7. சூத்திர பட்டை (Formula Bar) | சூத்திரங்களை வெளிப்படுத்துவதற்கும் கலங்களின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தவும் உதவும் |
8. வடிவமைப்பு கருவிப்பட்டை ( Formatting Tool Bar) | பணித்தாளினை வடிவமைக்க உதவும் |
9. இயக்கு கலம் (Active Cell) | தரவு உட்புகுத்திய கலத்தை காட்டும் |
1. நிரல்களின் தலைப்பு (Column Heading) | நிரல்களின் தலைப்புகளை காட்டும் |
2. நீள் சுருள்பட்டை (Vertical Scroll Bar) | பணித்தாளை கிடையாக நகர்த்த உதவும் |
3. வரிசை தலைப்பு (Row Heading) | வரிசை இலக்கத்தை காட்டும் |
4. கிடைச்சுருள்பட்டை (Horizontal Scroll Bar) | பணித்தாளை செங்குத்தாக நகர்த்த உதவும் |
5. பணித்தாள் தத்தல் (Sheet Tab) | பணித்தாis பிரதிநிதிப்படுத்தும் |
6. பணித்தாள் வழி கண்டறிதல் பொத்தான் | பணித்தாள்களை மாற்றுவதற்கு உதவும் |
7. நிலைமை பட்டை (Status bar) | பணித்தாளுடன் இணைந்த நிலைமைகளை காட்சிப்படுத்தும் |
8. உரு கட்டுப்பாட்டு கருவி (Zoom Control) | பணித்தாள்களை விரிவாக்குவதற்கு அல்லது சுருக்கி பார்க்க உதவும் |
பணித்தாள் (worksheet)
இரு பரிமாணத்தளத்தில் நிரல்கள்( Columns) மற்றும் நிரைகள்(Rows) என்றவாறு அமையப்பெற்ற கலங்களின் தொகுப்புக்களைக் கொண்டு பணித்தாள்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவை பணித்தாள் தத்தல்கள் (sheet tap) மூலம் வெளிக்காட்டப்படுகின்றன.
பணித்தாள்களின் நிரல்களை பெயரிடல் (Naming)
பணித்தாளில் உள்ள நிரல்கள் (Columns Names) பின்வருமாறு ஆங்கில எழுத்துக்கள் மூலம் அல்லது எழுத்துத் தொகுதிகள் மூலம் பெயரிடப்படுகின்றன.
A,B,C,D,....Z வரையும்
AA,AB,AC,AD,AE,...,AZ , வரையும்
BA,BB,BC,BD,BE,BF,....,BZ வரையும் என்றவாறு பெயரிடப்படும்.
பணித்தாள்களின் நிரைகளை (Rows) பெயரிடல்
1,2,3,4,5,..... என்ற விதமாகவே பணித்தாளின் நிறைகள் பெயரிடப்பட்டிருக்கும் கீழுள்ள படத்தை பார்க்க.
#MSOffice
#Excel
#ExcelTamil
#LearnExcelTamil
#LearnExcel
கருத்துகள்
கருத்துரையிடுக