கணிப்பொறியின் அடிப்படைகள். ( The Basics of Computer )
முன்னுரை
Operating system
நாம் விண்டோஸ் 10 (Win10) அப்படிங்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டம் பத்தி தெரிஞ்சுக்க போறோம்.
இதேபோல் அடிக்கடி பயன்படுத்தப்படும் பயிர்கள் இசைகள் ஒளிகள் மற்றும் போல்டர்களை நீங்கள் ஷார்ட்கட்டாக வைத்துக் கொண்டு எளிதாக பயன்படுத்த முடியும்.
முதலில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்படின்னா என்ன என்று தெரிந்து கொள்வோம். கம்ப்யூட்டர் அப்படிங்கற ஹார்டுவேர்ல இருக்கிற செயல்பாடுகள் எப்படி செயல்படும் அப்படிங்கிற வழிமுறைகள் இருக்கிறதுதான் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதாவது இந்த ஹார்டுவேர் எப்படி செயல்பட்டு நமக்கு தேவையான ரிசல்ட் கொடுக்கணும் அப்படிங்கிற தான் ஆப்பரேட்டிங் சிஸ்டம்.
இந்த விண்டோஸ் 10 மாதிரியே விண்டோஸில் நிறைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்கு அது
விண்டோஸ் 98
விண்டோஸ் XP.
அதுமட்டுமில்லாமல்
லினக்ஸ்(Linux)
யுனிக்ஸ்(Unix)
குரோம் ஓஎஸ்(Chrome OS)
மேக் ஓஎஸ் (Mac OS),
இந்த மாதிரியான ஆப்பரேட்டிங் சிஸ்டமு ம் வழக்கத்தில் இருக்கு.
பொதுவாக அதிகமான நபர்களால் உபயோகப்படுத்தக் கூடிய இந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி , இந்த தொகுப்பில் நாம் அறிந்துகொள்வோம். அதனால கவனமா இதை படித்து உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் கீழே வந்து கமெண்ட் பண்ணுங்க நான் உங்களுக்கு தக்க பதில் அளிக்கிறேன். மேலும் அடுத்த பதிவுகளை பாருங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
புதிதாக கம்ப்யூட்டர்(Computer) அல்லது லேப்டாப்(Laptop) வாங்கும் பொழுது விண்டோஸ் 10 (Win10) இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். இல்லையென்றால் ஆன்லைனில் வாங்கி புதிதாக விண்டோஸ் 10 ஏற்றிக் கொள்ளவும் அல்லது ஏதாவது ஒரு கணிப்பொறி விற்கும் இடத்திற்கு சென்று விண்டோஸ் 10 ஏற்றிக் கொள்ளவும்.
ஏற்கனவே உள்ள லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் விண்டோஸ் அப்கிரேட்(Upgrade) செய்து கொள்ளலாம். குறைந்தபட்சம் Core i3 மற்றும் 4GB RAM உள்ள கணிப்பொறியை பயன்படுத்தலாம்.
ஆன்லைனில் விண்டோஸ் 10 மிகக் குறைந்த விலையில் வாங்கி இன்ஸ்டால் செய்யவும். www.google.comல் விண்டோஸ் 10 என்று டைப் செய்து shopping என்ற டேப் மூலம் மிக குறைந்த விலையில் வாங்கலாம்.
விண்டோஸ் 10 உள்ள கணிப்பொறியை ஆன் செய்தவுடன் சிறிது நேரத்தில் Login page வரும். பயனாளர் பெயரை தேர்வு செய்து சரியான கடவுச்சொல்லை தந்து உள்ளே செல்லவும். இப்போது டெஸ்ட் ஆப் ஓபன் ஆகும். அதிலுள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை(Applications/Programs) தொடங்கிக் கொள்ளலாம் .
கீழே உள்ள Search பட்டனை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான அப்ளிகேஷனை டைப் செய்து எளிமையாக ஓபன் செய்து கொள்ளலாம்.
Win+R கிளிக் செய்தவுடன் Run கமெண்ட் பாக்ஸ் ஓபன் ஆகும் அதில் உங்களுக்கு தேவையான அப்ளிகேஷன் பெயரை டைப் செய்து அந்த அப்ளிகேஷன் உடனே ஓபன் (Open) ஆகும்.
இது படங்களை வரைவதற்கும் ஏற்கனவே உள்ள படங்களுக்கு சிறிய மாறுதல்கள் செய்வதற்கும் வண்ணங்கள் தீட்டுவதற்கு உதவுகிறது. இருவரும் மிகவும் எளிய செயலி இதன் மூலம் யாரு வேண்டுமானாலும் எளிதாக படம் வரைய முடியும்.
calc - Calculator
எளிய கணக்குகளை செய்ய இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கிறது. இதில் பேசிக் கால்குலேட்டர் , மற்றும் சயின்டிஃபிக் கால்குலேட்டர் உள்ளது.
cmd - command prompt
MS Dos ல் உள்ள கமெண்ட்களை (Commands) பயன்படுத்துவதற்கு இது பயனுள்ளதாக உள்ளது.
msconfig - system configuration
கணிப்பொறி என்னுடைய அட்வான்ஸ் செட்டிங்கில் பயன்படுத்த இதை உபயோகப்படுத்தலாம்.
msinfo32 - system information
கணிப்பொறியை பற்றிய முழு தகவலும் இதில் உள்ளது.
winword - microsoft word (if installed in PC)
மைக்ரோசாப்ட் ஆஃபீஸில் உள்ள வேர்டு செயலியை பயன்படுத்த இதை உபயோகப்படுத்தலாம். சில டாக்குமெண்ட்களை தயாரிக்கவும் அதை வடிவமைக்கவும் மேலும் அதை பிரின்ட் (print) எடுக்கவும் பயன்படுத்துகிறது.
Excel - microsoft excel (if installed in PC)
மைக்ரோசாஃப்டில் உள்ள Excel செயலியை பயன்படுத்தலாம். இது நிறைய தகவல்கள் கணக்குகள் செய்யவும் சேமிக்கவும் பயன்படுகிறது.
மைக்ரோசாஃப்டில் உள்ள Excel செயலியை பயன்படுத்தலாம். இது நிறைய தகவல்கள் கணக்குகள் செய்யவும் சேமிக்கவும் பயன்படுகிறது.
டெஸ்க்டாப்பில்(Desktop) உள்ள ஷார்ட்கட்டில்(Shorcut) உங்களுக்கு தேவையான அப்ளிகேஷன் வைத்துக்கொண்டால் எளிமையாக அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்யலாம்.
அளவிற்கு அதிகமான ஷார்ட்கட்களை எஸ்டாப்பில் வைத்தால் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும் அதிகபட்சம் 15 அல்லது 20 ஷார்ட் கட் நல்லது. அடிக்கடி உபயோகப்படுத்தும் செய்திகள் அல்லது கோப்புகள் ஆகியவற்றின் ஷார்ட்கட்களை வைப்பது சிறந்தது.
இப்பொழுது எவ்வாறு Shortcut டெஸ்க்டாப்பில் புதிதாக உருவாக்குவது என்று பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்புளோரர்(Windows Explorer) மூலம் உங்களுடைய தேவையான அப்ளிகேஷன் போல்டரை ஓபன் செய்யவும். பின்னர் அந்த அப்ளிகேஷனை ரைட் கிளிக் (Right click) செய்து Send to Desktop
என்று தேர்வுசெய்யவும். இப்பொழுது Desktopல் தேவையான அப்ளிகேஷனின் Shortcut உருவாகி ஆகியிருக்கும்.
இதேபோல் அடிக்கடி பயன்படுத்தப்படும் பயிர்கள் இசைகள் ஒளிகள் மற்றும் போல்டர்களை நீங்கள் ஷார்ட்கட்டாக வைத்துக் கொண்டு எளிதாக பயன்படுத்த முடியும்.
Windows ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும். Power --> Shutdown என்ற ஆப்ஷனை செலக்ட் பண்ணவும். இப்பொழுது உங்களுடைய கணிப்பொறி முழுவதுமாக அணைத்து வைக்கப்படும்.
Sleep - உங்களது கணிப்பொறி தூங்கும் நிலைக்கு செல்லும் ஆனால் நீங்கள் ஓபன் செய்து வைத்திருக்கின்ற கோப்புகள் அப்படியே இருக்கும்.
Restart - கணிப்பொறியில் உள்ள அனைத்து கோப்புகளையும் முடக்கிவிட்டு கணிப்பொறியை முழுவதுமாக அணைத்து விடும் மறுபடியும் கணிப்பது ஆரம்பிக்கப்படும்.
விண்டோஸ் டெஸ்க்டாப்ல் Right Click செய்யவும். Create shortcut என்று Click செய்யவும். இப்போது "C:\Windows\System32\shutdown.exe -s -t 0" என்று டைப் செய்யவும்.
shutdown என்ற புது icon உங்களது டெஸ்க்டாப்ல் உருவாகி இருக்கும். இதை கிளிக் செய்தால் கணிப்பொறி முழுவதுமாக அணைத்து வைக்கப்படும்.
Windows Explorer
நாம பார்க்கப் போறது விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் (Windows Explorer).
Win+E Key அழுத்துங்க, அல்லது விண்டோஸ் Task Barல இருக்குற Icon கிளிக் பண்ணுங்க அல்லது Start-> Run போயிட்டு explorer.exe தட்டச்சு செய்யுங்கள்
விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் உங்க சிஸ்டத்துல இருக்கிற கோப்புக்களை (Folder/files) பார்க்க உதவுகிறது.
அடிக்கடி பயன்படக்கூடிய முக்கியமான செயல்களை மட்டும் இங்கே பார்ப்போம்
View
உங்கள் பைல்களை வித்தியாசமான முறைகள் காண்பதற்கு View பயன்படுகிறது
Extra Large Icon
Large Icon
Medium Icon
Small Icon
List
Details
Tiles
Content
Select/Cut/Copy/Paste
முதலில் தேவையான பைல்களை செலக்ட் செய்து கொள்ளவும். ஒரு பைலை(File) செலக்ட் செய்ய ஒரு முறை கிளிக் செய்யவும். ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை செலக்ட் செய்யும் போது Ctrl பட்டனை அழுத்திப் பிடித்துக்கொண்டு தேவையான பைல்களை செலக்ட் செய்யலாம். அல்லது முதலில் ஒரு பைலை செலக்ட் செய்து பின்னர் Shift பிடித்துக்கொண்டு கடைசி பைலை செலக்ட் செய்தால் இடையில் உள்ள அனைத்து பைல்களும் செலக்ட் ஆகி விடும்.
தேவையான பைல்களை செலக்ட் செய்த பின்னர் Ctrl+x பயன்படுத்தி கட்(cut) செய்யலாம் அல்லது Ctrl+C பயன்படுத்தி காப்பி செய்யலாம். தேவையான போல்டருக்கு சென்ற பின்னர் Ctrl+V பயன்படுத்தி பேஸ்ட்(Paste) செய்யவும். மேற்கண்ட ஆப்ஷன்கள் ரைட் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
Navigation pane
View ல் Navigation Pane என்று தேர்வுசெய்தால் உங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரர் இடது பக்கம் Navigation Pane தோன்றும். இதை பயன்படுத்தி உங்கள் கணினியில் உள்ள அனைத்து டிரைவ்களை(Drive C, D, E) பார்க்க முடியும் மற்றும் அண்மையில் பயன்படுத்திய போல்டர்களை பார்க்க முடியும்.
Preview pane
உங்களுக்கு நிறைய பையன்களை தேடும்பொழுது அதனுள் என்ன விஷயம் இருக்கிறது என்று ஓபன் செய்யாமல் பார்க்க பிரபு பயன்படுகிறது.
Picture, text, pdf documents எளிதாக View செய்ய முடியும் MS Office இன்ஸ்டால் ஆகியிருந்தால் word, Excel, PPT பார்க்க முடியும். Edit செய்ய முடியாது
Hidden files/Folders
ஒரு சில நேரங்களில் நீங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் சில கோப்புகளை மறைத்து வைக்கலாம். உங்களுக்கு தேவையான கோப்பை செலக்ட் செய்யவும் பின்னர் Show/Hide ஐகானை கிளிக் செய்யவும்.
Hidden Items check Box தேர்வு செய்து இருந்தால் மட்டுமே பைல்களை பார்க்க முடியும்.
Shortcuts
1. Desktop Shortcut
உங்களுக்கு எந்த அப்பிளிக்கேசன் shortcut வேண்டுமோ அந்த போல்டரை ஓபன் செய்யவும். அதில் பல பைல்கள் இருக்கும். சரியான application பைல்ஐ right கிளிக் செய்யவும், பின்னர் send to desktop select செய்யவும். இப்போது புதிதாக ஒரு shortcut desktopல் இருக்கும். அதை double கிளிக் செய்து , application ஓபன் செய்யலாம்.
2. Keyboard shortcuts
உங்களுக்கு எந்த அப்பிளிக்கேசன் Keyboard shortcut வேண்டுமோ அந்த பைல்Shortcutஐ right கிளிக் செய்யவும், பின்னர் Properties தேர்வு செய்யவும்.
இப்பொழுது shortcut தேர்வு செய்து உங்களுக்கு தேவையான Keys தேர்வுசெய்யவும். எடுத்துக்காட்டு Ctrl+Shift+E , Ctrl+Alt+N.
முடிந்தவரை விண்டோஸின Default ஷார்ட்கட் ஐ பயன்படுத்த வேண்டாம்.
3 Task bar Shortcut
நீங்கள் ஏதாவது ஒரு அப்ளிகேஷன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது அதை shortcutஆக பயன்படுத்த டாஸ்க்பாரில்(Taskbar) அந்த ஐகான்(icon) மீது ரைட் கிளிக் செய்யவும் பின்னர் Pin to Taskbar என்று தேர்வு செய்யவும்.
மேலே கட்டப்பட்ட விஷயங்களை நீங்களாக பலமுறை செய்து பார்த்து உபயோகமுறையை நன்றாக கற்றுக் கொள்ளவும் அது பல விதங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
மேற்கொண்டு பல செயலிகளை நீங்கள் கற்றுக் கொள்வதற்கும் மற்றும் எளிதாக ஒரு தனிப்பெருவேன் உலா வருவதற்கும் இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். மிகவும் நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக