Computer Buying Guidelines / Things to be known before buying Laptop or Computer/ How to buy a computer or laptop
முதலில் நாம் பார்க்க வேண்டிய விஷயம், நாம் என்ன தேவைக்காக இந்த கணிப்பொறியை வாங்குகிறோம் என்பதாகும் .
உதாரணம்
- ஆன்லைனில் (On-line class) படிப்பதற்காக
- மைக்ரோசாப்ட் ஆபீஸ் (Micro soft office) பயன்படுத்துவதற்கு
- வெப் பிரவுசிங் (Web Browsing) செய்வதற்கு
- வீடியோ எடிட்டிங்(Video editing) செய்வதற்கு.
பயன்பாட்டுக்கு தகுந்தவாறு நாம் கணிப்பொறி அல்லது லேப்டாப் வாங்குவதற்கு முடிவு செய்ய வேண்டும்.
மேலும் அது நம்முடய பட்ஜெட் விலையில் கிடைக்க வேண்டும் .
நல்ல தரம் உள்ள கணிப்பொறி வாங்குவது நல்லது .
Laptop vs Computer
கணிப்பொறி வாங்குவதன் நன்மைகள்
1. விலை மிகவும் குறைவாக இருக்கும்
2. எதிர்காலத்தில் அதன் ஹார்ட்வேர்களை(Hardwares) குறைவான விலைக்கு நவீனமாகச்(Upgrade) செய்ய முடியும்
3. ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை எளிதில் சரி செய்யலாம் . ஏனென்றால் அதனுடைய உதிரி பாகங்களின் விலை குறைவு.
கணிப்பொறி வாங்குவதில் உள்ள வரம்புகள்(Limitations).
1. ஒரு இடத்தில் மட்டுமே பொருத்த முடியும். வெளியில் எடுத்துச் செல்ல முடியாது.
2. அதிகமான இடத்தை அடைத்துக் கொள்ளும். (CPU,Monitor, Mosue, Keyboard, Table, UPS)
3. அதிக மின்சாரம் தேவைப்படும் மேலும் யுபிஎஸ் போன்ற சாதனங்கள் வேண்டும்.
4. கணிப்பொறியய் பொறுத்த மேஜை தேவை (Tamil)
லேப்டாப் வாங்குவதுதன் நன்மைகள்
1. வெளியில் எங்கும் எடுத்துச் செல்ல முடியும் கையடக்கமாக இருக்கும்
2. அதிலேயே பேட்டரி இருப்பதால் மின்சாரம் இல்லாத போதும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இயக்க முடியும்.
3. குறைந்த இடத்தை எடுத்துக் கொள்ளும்
லேப்டாப் வாங்குவதில் உள்ள வரம்புகள்(Limitations)
1. ஆரம்ப விலை அதிகமாக இருக்கும்
2. உதிரி பாகங்களின்(Spare parts) விலையும் அதிகமாக இருக்கும்
கணிப்பொறி அல்லது லேப்டாப்பின் உள்ள முக்கிய பாகங்கள் மற்றும் அதை பற்றிய விளக்கங்கள்.
1. CPU/ Processor/mother board
கணிப்பொறி அல்லது லேப்டாப்பின் மிக முக்கியமான பொருள் CPU(Central Processing Unit) .
இந்த CPUல் ப்ராசசர்(Processor) இருக்கும். அது மதர்போர்டில்(Mother board) இருக்கும்.
கணிப்பொறியின் வேகத்தை தீர்மானிப்பது பிராசஸர். எனவே மிகச் சரியான பிராசசர் தேர்வு செய்ய வேண்டும்.
சாதாரண பயன்பாடுகளுக்கு Intel Celeron Processors/Dual core/i3 பயன்படுத்தவும் (Basic AMD processor also ok).
மிதமான பயன்பாட்டிற்கு Inter i5 / AMD Ryzen 5 Processor பயன்படுத்தவும்
அதிகமான செயல்பாடு உள்ள அப்ளிகேஷன்கள் (Applications) அதாவது வீடியோ எடிட்டிங், டிசைனிங்(Designining) போன்றவற்றுக்கு Imtel i7 / Xeon Processor பயன்படுத்தவும்.
மதர்போர்டு மிகவும் முக்கியமானது. ஏன் என்றால், அதில்தான் பிராசஸர் RAM ,ஹார்ட் டிஸ்க் (HDD) மற்றும் உள்ளீட்டு வெளி இணப்புகள் (I/O) செய்யப்படுகின்றன.
2. RAM (Random Access Memory)
இது இது ஒரு தற்காலிக மெமரி இதில் கணினி இயங்கும் போது நம்முடைய அப்ளிகேஷன்கள் (Applications/Software's) சரியாக சேவ்(Save) செய்யப்பட்டு கணக்குகள் அனைத்தும் செயல்படும் எனவே கணினிஅப்ளிகேசன்களுக்கு தகுந்த மாதிரி RAM மெமரி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8 GB இருப்பது நல்லது நம்முடைய பயன்பாட்டுக்கு தகுந்தார்போல் தேர்வு செய்து கொள்ளலாம் . RAMன் வேகமும் மிகவும் முக்கியமானது, இதைப் பொறுத்து உங்கள் கணிப்பொறியில் வேகம் மாறுபடும்.
3. Hard disk
இது உங்களுடைய தகவலை சேமித்துக் கொள்ள பயன்படுகிறது 500GB/ 1TB அளவுள்ள மெமரி தேவைப்படும்.
இதில் இரண்டு வகைகள் உள்ளன, ஒன்று HDD மற்றது SSD.
HDD பொதுவாக பயன்படுத்தக்கூடியது.
SSD மிகவும் விரைவாக இருக்கும், இதனுடைய விலை மிகவும் அதிகம்.
4. DVD/ CD drive / Optical Drive
CD/ DVD RW என்று எழுதி இருந்தால் மட்டும் உங்களுடைய CD/DVD ட்ரைவ் படிக்க மற்றும் எழுத முடியும் (Read & Write) முடியும் . DVD Combo என்று எழுதியிருந்தால் CD/DVD படிக்க(Read only) மட்டுமே செய்யும். நீங்கள் கணிப்பொறி வாங்கும்போது Optical Drive- "No" ன்று எழுதி இருந்தால் CD/DVD இருக்காது எனவே கவனமாக இருக்கவும்.
5. Bluetooth
கணிப்பொறியுடன் உங்களுடைய செல்போன் இணைத்து பயன்படுத்துவதற்கு மற்றும் அதில் உள்ள தகவல்கள் அல்லது படங்களைப் பரிமாறிக் கொள்வதற்கு பயன்படுகிறது.
இந்த வசதி இல்லாமல் நீங்கள் கணிப்பொறி வாங்கி இருந்தாலும் பின்னாளில் Bluetooth dongle மூலமாக நீங்கள் இந்த வசதியை பெற முடியும்
6.WiFi
உங்களுடைய WiFi ரூட்டர் (WiFi Router) அல்லது மொபைல் போன் மூலமாக இன்டர்நெட் வசதியை பயன்படுத்திக் கொள்ள இந்த வசதி பயன்படுகிறது.
இந்த வசதி இல்லாமல் நீங்கள் கணிப்பொறி வாங்கி இருந்தாலும் பின்னாளில் Wi-Fi Dongle மூலமாக நீங்கள் இந்த வசதியை பெற முடியும்.
7. I/O ports.
கணிப்பொறியின் உள்ளீட்டு மட்டும் வெளியீட்டு சாதனங்கள் மற்றும் மற்ற சாதனங்களை இணைக்கும் அமைப்பு
a. LAN
இது கேபிள் மூலமாக internet இணைப்பு ஏற்படுத்துவதற்கு பயன்படுகிறது.
b. USB
பெரும்பாலான கருவிகளை கணிப்பொறியுடன் இணைக்க, இந்த யுஎஸ்பி போர்ட் பயன்படுகிறது எடுத்துக்காட்டு Mouse, Keyboard, Pen drive, External Hard Disc,
c.P/S2
கீபோர்டு மற்றும் மவுஸ் இணைப்பதற்கு இந்த P/S2 பயன்படுகிறது. இந்த போர்ட் இல்லையென்றாலும் யுஎஸ்பி(USB Port) பயன்படுத்திக்கொள்ள முடியும்.
குறிப்பு : கணிப்பொறியை ஆன் செய்வதற்கு முன்னால் இந்த P/S2 போர்ட்டில் மவுஸ் அல்லது கீபோர்டு கனெக்ட் செய்தால் மட்டுமே கீபோர்டு அல்லது மவுசை பயன்படுத்தமுடியும் . கணிப்பொறி செயல்பாட்டில் இருக்கும் பொழுது இந்த போர்ட் வழியாக மவுஸ் அல்லது கீபோர்ட் இணைத்தால் செய்யாது
e.VGA.
CPUலிருந்து உங்களுடைய மானிடருக்கு தகவல்களை பரிமாறிக்கொள்ள இந்தப் VGA போர்ட் பயன்படுகிறது.
f. Display Port.
இதுவும் CPUலிருந்து உங்களுடைய மானிடருக்கு தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படுகிறது.
g. HDMI
இதுவும் CPUலிருந்து உங்களுடைய மானிடருக்கு தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படுகிறது.
h. Serial port
கணிப்பொறியுடன் பிரிண்டர் அல்லது பெரிய இயந்திரங்களை இணைக்க இது பயன்படுகிறது
8. Monitor
கணிப்பொறியிலிருந்து தகவல்களை உங்களுக்கு காண்பிக்க Monitor (திரை) பயன்படுகிறது. உங்களுடைய பயன்பாட்டிற்கு தகுந்தவாறு இதனுடைய அளவை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளை இணைக்க வசதி உள்ளது தேவைப்படின் அதற்கு தகுந்தவாறு கம்ப்யூட்டர் மதர் போர்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.
9. Graphics Card
கணிப்பொறியிலிருந்து தகவல்களை கணிப்பெறி திரைக்கு காண்பிக்க தேவைப்படுமாறு மாற்றம் செய்கின்ற ஒரு பொருள் கிராபிக்ஸ் கார்டு ஆகும் இது ஒன்றுக்கு மேற்பட்ட திரைகளை இணைப்பதற்கு வசதி செய்து கொடுக்கின்றது, மேலும் வீடியோ எடிட்டிங் மற்றும், CAD அப்ளிகேஷன் களுக்கு பயன்படுகிறது.
இதனுடைய மெமரி 2GB அல்லது 3GB இருக்குமாறு வாங்கிக் கொள்ளவும்.
சாதாரண அப்ளிகேஷன் பயன்படுத்துவோருக்கு பிராசசரில் இருக்கும் கிராபிக்ஸ் கார்டு போதுமானது
நான்கு அல்லது ஆறு திரைகளை இணைப்பதற்கு 2 அல்லது 3 கிராபிக்ஸ் காடுகள் தேவைப்படும் அதற்கு தகுந்தவாறு மதர்போர்டில் வசதி இருக்க வேண்டும்.
மிக முக்கியமாக டெடிகேட்டட் கிராபிக்ஸ் கார்டு (Dedicated Graphics Card) என்று கேட்டு வாங்கவும் இல்லையென்றால் உங்களுடைய RAMல் உள்ள மெமரியை கிராபிக்ஸ் கார்டு எடுத்துக்கொள்ளும் .
ஒரு சில பொதுவான பயன்பாடுகளுக்கு தேவையான கணிப்பொறியின் Configuration இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு வழிநடத்தல் (Guide)மட்டுமே ஆகும். உங்களுடைய பயன்பாட்டிற்கு தகுந்தவாறு தேவையான கணிப்பொறியை நீங்கள்தான் வாங்கிக் கொள்ள முடியும்.
10. Operating System (OS)
கணிப்பொறி இயக்குவதற்கான மென்பொருள் - Operating System (OS).
பொதுவாக விண்டோஸ் (Windows OS) பயன்படுத்துகின்றோம்.
Preferably Windows 10 .
மேலும் Linux, Mac OS, Chrome OS பயன்பாட்டில் உள்ளன.
உங்களுக்குத் தேவையான கணிப்பொறியை தேர்வு செய்த பின்னர், அதைப்பற்றிய விவரங்களை இன்டர்நெட்டில் தேடவும் பல பயனாளர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை அதில் தெரிவித்து இருப்பார்கள் . அதைப் பொறுத்து உங்களுடைய கணிப்பொறி எந்த அளவிற்கு செயல்படும் என்று முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளலாம்.
நீங்கள் தேர்வு செய்துள்ள பிராசஸர் கிராபிக்ஸ் கார்ட் போன்றவற்றை இன்டர்நெட்டில் தேடி அதனுடைய திறமையை பரிசோதித்து சரியான பிராசஸர் மற்றும் கிராபிக்ஸ் கார்டு தேர்வுசெய்யவும்.
கீழே உள்ள லிங்குகலை பயன்படுத்தவும்
https://www.cpubenchmark.net
https://cpu.userbenchmark.com
https://www.videocardbenchmark.net
கணிப்பொறியை நேரில் சென்று வாங்குவதாக இருந்தால் அதைப் பற்றி நன்றாக தெரிந்த ஒருவரை கூட கூட்டி சொல்லவும்.
கணிப்பொறியை வாங்கிய பின்னர் உடனே பரிசோதித்துப் பார்க்கவும் தேவையான மென் பொருட்களை அதில் ஏற்றி இயக்கி பார்க்கவும் சரியான வேகத்தில் அது இயங்கினால் நீங்கள் அந்த கணிப்பொறியை அல்லது மடிக்கணியை வாங்கிக் கொள்ளலாம். அல்லது வேறு கடையை தேடிப் பார்த்து நல்ல கணிப்பொறியை வாங்கவும்.
ஆன்லைனில் வாங்குவதாக இருந்தால் தேவையான கணிப்பொறி அல்லது மடி கணினியை தேர்வு செய்த பின்னர் அதைப்பற்றி தெரிந்தவரிடம் விசாரிக்கவும் அது போன்று மாடல் யாராவது உபயோகப்படுத்தி இருந்தால் அவர்களுடைய கருத்துக்கணிப்பை கேட்கவும். உங்களுக்கு அந்த கணிப்பொறி டெலிவரி செய்த உடனே அதை பரிசோதனை செய்து தேவையான மென்பொருட்களை ஏற்றி உபயோகப்படுத்தி பாருங்கள் பிடிக்கவில்லை என்றால் உடனே அந்த ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தேவையான கணிப்பொறிக்கு மாட்டிக் கொள்ளவும்.
Conclusion
பயன்பாட்டுக்கு தகுந்தவாறு நாம் கணிப்பொறி அல்லது லேப்டாப் வாங்குவது நல்லது. கணிப்பொறியை பற்றி நன்கு தெரிந்த பின்னர் வாங்குவது நல்ல பயனை தரும். பண வீரயத்தை தடுக்கலாம்.
நீண்ட காலம் உழைக்கக்கூடிய நல்ல நிறுவனத்தின் கணிப்பொறி அல்லது மளிகை வாங்குவது மிகச் சிறந்த முடிவாகும் இதில் சிறிது பணம் அதிகமாக செலவு செய்தாலும் அது நமக்கு பல சிரமங்களை தவிர்க்கும்.
#Computer Buying Guidelines
#Things to be known before buying Laptop or Computer
# How to buy a computer or laptop
#Computer
#Laptop
#Buycomputer
#Buydesktop
#BuyPC
கருத்துகள்
கருத்துரையிடுக