Cyber Security - Internet Security
தற்போதைய அதிநவீன உலகத்தில் இணையம் (Internet) கணிப்பொறி (Computer) செல்லிடப்பேசி (cellphone) இன்றியமையாத ஒன்றாகிறது. அனைவரது அன்றாட வாழ்க்கையிலும் இவை அனைத்தும் இரண்டறக் கலந்துள்ளன.
எனவே இணைய பாதுகாப்பு
இன்றியமையாத ஒன்றாகிறது. இப்போது இந்தப் பதிவில் இதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.
இணையம்
முதலில் இணையம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.
பல கணிப்பொறிகள் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்ட பெரிய வலைப்பின்னல் இணையம் என்று
அழைக்கப்படுகிறது இதன் மூலம் தகவல்கள் ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொன்றிற்கு
பரிமாறப்படுகிறது. எனவே இணையமானது மக்களுக்கு மிகவும் பயனுள்ளது இதன் மூலம் எளிதாக
மக்கள் செய்திகளை பரிமாறிக் கொள்ள முடிகிறது பணப் பரிவர்த்தனைகள் செய்ய முடிகிறது
கல்விக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை தருகிறது. இருந்தபோதிலும் இணையத்தில்
பாதுகாப்பு என்பது மிகவும் குறைவு. இணையத்தை பயன்படுத்தும் நாம் அனைவரும் நம்முடைய
தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
Virus
கணிப்பொறியின் செயல்பாட்டினை
முடக்கக்கூடிய ஒரு மென்பொருள். இது தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளக்கூடிய ஒரு
செயலி. இணையத்தின் மூலமாக எளிதாக பரவுகிறது. இதை கட்டுப்படுத்த நமது கணிப்பொறியில்
கண்டிப்பாக antivirus என்று சொல்லக்கூடிய மென்பொருளை
நிறுவியிருக்க வேண்டும்.
Malware
இது உருவாக்குபவரின்
நோக்கத்திற்காக செயல்படக்கூடிய மென்பொருள் இது கணினியில் தகவல்களை சேகரிக்கவும்
மற்றும் பயனரின் அனுமதி இன்றி கணிப்பொறியை செயல்படுத்தவும் பயன்படுகிறது.
Adware
இந்த மென்பொருளானது பல
விளம்பரங்களை கொண்டிருக்கும் பெரும்பாலும் இவை எந்த தீங்கும் விளைவிப்பதில்லை
ஆனால் ஒரு சில மென்பொருள்கள் தகவல்களை திருட கூடியவை. எனவே மிகவும் பாதுகாப்பாக
இருக்க வேண்டும். இலவசமாக கிடைக்கும் மென்பொருட்களை கணிப்பொறியிலேயோ அல்லது
செல்லிடப்பேசியிலேயோ பதிவிறக்க கூடாது.
Phishing
இணையம் அப்படி என்று சொல்லக்கூடிய இன்டர்நெட்டில் மிக முக்கியமாக கவனிக்க
வேண்டிய ஒரு விஷயம் பிஷிங். அதாவது நாம் மீன்பிடிக்க சிறு புழுவைக் கொண்டு
தூண்டிலில் மாட்டி முதலில் மீனிற்கு இறையாக அனுப்புவோம் மீன் ஏமாந்து அந்த புழுவை
பிடித்தவுடன் தூண்டிலில் மாட்டி கொள்ளும் அதுபோல இன்டர்நெட்டில் நம்மை கவரக்கூடிய
விஷயங்கள் இருக்கும் அதை தெரியாமல் கிளிக் செய்தால் நம்மிடமிருந்து தகவல்களையும்
பணத்தையும் எடுத்துக் கொள்வார்கள். எனவே மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இப்பொழுது இணையத்தை பயன்படுத்தும்போது கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்புகளை
பார்ப்போம்.
1. கட்டாயம் உங்களுடைய
கணிப்பொறியில் antivirus நிறுவப்பட்டு இருக்கவேண்டும்.
2. இலவச மென்பொருட்களை (software's,
applications ) கணிப்பொறி அல்லது உங்கள் மொபைலில் இருந்து நீக்கவும்.
3. WhatsApp அல்லது messageல் வரும்
லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.
4. பணப்பரிவர்த்தனை செய்ய
உங்களுடைய பாங்கின் (Bank apps) அப்ளிகேஷன்களை பயன்படுத்தவும்.
5. கணிப்பொறிக்கு அடிக்கடி
பாஸ்வேர்ட் (Password) என்று சொல்லக்கூடிய
கடவுச்சொல்லை மாற்றவும். மேலும் பாஸ்வேர்டை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
உங்களது மொபைலில் பதிவு செய்து கொள்ள வேண்டாம். கண்டிப்பாக உங்களது மனதில் ஞாபகம்
வைக்கவும்.
6. முகம் தெரியாத நபர்கள்
உங்களுக்கு போன் செய்து உங்களை பற்றிய தகவலை கேட்டால் கண்டிப்பாக பகிர கூடாது.
7. கணிப்பொறி மற்றும் மொபைலின்
சாப்ட்வேர்களை முறையாக அப்டேட் செய்யவும்.
8. உங்களின் புகைப்படம் மற்றும்
தகவல்களை இன்டர்நெட்டில் பதிவிட வேண்டாம். ஸ்டேட்டஸ் வைப்பது டிபி பிக்சர் வைப்பது
ஆகியவற்றை தவிர்க்கவும்.
9. தேவையற்ற நேரங்களில்
இன்டர்நெட்டை ஆப் செய்து வைக்கவும்.
10. இன்டர்நெட் பயன்படுத்தும் போது
அவருடைய அட்ரஸ் ஆனது "https:// " என்று
தொடங்குகிறதா என்று உறுதி செய்யவும் இவையே பாதுகாப்பான வெப்சைட்டுகள்.
11. கம்ப்யூட்டரின் ஃபயர்வாலை (Firewall) எப்பொழுதும் ஆன் செய்து
வைக்கவும்
12. கணிப்பொறியை பயன்படுத்தி
முடித்தவுடன் ஹிஸ்டரியை (History) டெலிட் செய்யவும்.
13. Web browser மூலம் ஏதாவது வெப்சைட்டில்
லாகின் (Login) செய்து இருந்தால் , பயன்பாடு
முடிந்தவுடன் லாகவுட் (Logout) செய்யவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக